Home இலங்கை அரசியல் அரசாங்க நிறுவனங்களின் இணைய கட்டமைப்பின் பாதுகாப்புக்கு புதிய ஏற்பாடு

அரசாங்க நிறுவனங்களின் இணைய கட்டமைப்பின் பாதுகாப்புக்கு புதிய ஏற்பாடு

0

அரசாங்க நிறுவனங்களின் இணையக் கட்டமைப்பில் ஊடுருவல் மேற்கொள்ளப்படாமல் தடுப்பதற்கு புதிய ஏற்பாடு ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக முக்கியமான தேசிய தகவல்களுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை பேணிவரும் அரசாங்க நிறுவனங்ளை தேசிய சைபர் பாதுகாப்பு மத்திய செயற்பாட்டு நிலையத்துடன் ஒருங்கிணைக்க இதன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கணனி அவசர சேவைகள் நிறுவனம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள்

இதன் மூலம், அரசாங்க நிறுவன இணையத்தளங்களில் ஊடுருவி அதனை முடக்குதல், தனிப்பட்ட மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை திருடுதல் போன்ற விடயங்களை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

NO COMMENTS

Exit mobile version