Home இலங்கை அரசியல் வடக்கு, கிழக்கு ஆட்சியமைப்பு: ஈபிடிபியிடம் மண்டியிட்டது தமிழரசு

வடக்கு, கிழக்கு ஆட்சியமைப்பு: ஈபிடிபியிடம் மண்டியிட்டது தமிழரசு

0

வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு வழங்க வேண்டும் என சி.வி.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன்படி, தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே டக்ளஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

https://www.youtube.com/embed/xhWgJSnqUaE

NO COMMENTS

Exit mobile version