இலங்கை தமிழ் அரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க கோரும் ஜனநாயக
போராட்டமானது இன்று (05)யாழ் தந்தை செல்வா நினைவு தூபி முன்பாக
இடம்பெற்றிருந்தது.
குறித்த போராட்டமானது முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா
ஜீவராஜா அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
உணவு தவிர்ந்த போராட்டம்
காலை 8.00மணி தொடக்கம்
2.00மணியளவில் வரை உணவு தவிர்ந்த போராட்டமாக நடாத்தப்பட்டிருந்தது.
இதில் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
