வன்னியில் ஒழுங்கான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பாடசாலை செல்லவேண்டிய பல சிறுவர்கள் ஒழுங்காக பாடசாலைக்கு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.ஆசிரியர் நேரத்திற்கு செல்ல முடியாத நிலைமை உள்ளது.
வன்னிப்பிரதேசத்தில் பல இடங்களில் மாணவர்கள் நீண்ட தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லும் நிலை உள்ளதுடன் பல மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையும் காணப்படுகிறது.
எனவே புதிய பேருந்துகளை இறக்குமதி செய்து கிராமபுறத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பட்சத்தில் கல்வித்தரம் உயரக்கூடிய வாய்ப்புள்ளது.
இவ்வாறு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லவம் அடைக்கலநாதன்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போதே வன்னி மாணவர்கள் படும் அவலநிலையை எடுத்துரைத்தார்.இது தொடர்பாக அவர் உரையாற்றிய மேலும் பல தகவல்கள் காணொளியில்…
https://www.youtube.com/embed/lwtOuPKsIdg
