எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரன், யாருக்கும் அடங்காத ஆணாதிக்கம் எண்ணம் கொண்ட ஒருவர்.
இவரது குடும்பத்தில் சிக்கி தவிக்கும் பெண்களின் வாழ்க்கை போராட்டத்தை வைத்தே எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். கதையில் ஈஸ்வரியை தாக்கிய குணசேகரன் வீடியோவை கைப்பற்ற சக்தி-ஜனனி பெரிதாக போராடி வந்தார்கள்.
ஆனால் அவர்கள் கடைசியாக எதிர்ப்பார்த்த கெவின் நண்பரும் இறந்துவிட்டார், இதனால் வீடியோ இல்லாததால் பதற்றத்தில் உள்ளனர்.
இந்த நேரத்தில் ஜனனியிடம் வீடியோ இல்லை என்பதை தெரிந்துகொண்ட குணசேகரன் அவர்களிடம் எகிறி பேசினார். பின் ஜனனி வீடியோவில் இருந்த விஷயங்களை புட்டுபுட்டு வைக்க குணசேகரன் ஆடிப்போனார்.
புரொமோ
ஈஸ்வரி வீடியோ கிடைக்காததால் சக்தி கடிதம் குறித்து விசாரிக்க இராமேஸ்வரம் கிளம்ப முடிவு எடுக்கிறார்.
அப்போது வீட்டில் இருக்கும் குணசேகரன் டீம் சக்தியை வெளியே அனுப்ப மறுக்க பின் அவர் தனது அண்ணனுக்கு பெரிய சவால்விட்டு வீட்டைவிட்டு வெளியே கிளம்புகிறார்.
ஜனனி இந்த முறை அவர் வெளியே வராத அளவிற்கு தண்டனை கிடைக்க வேண்டும் என கூறுகிறார்.
