Home இலங்கை அரசியல் ஹிஸ்புல்லாவுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது.. கேள்வி எழுப்பிய ஞானசார தேரர்

ஹிஸ்புல்லாவுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது.. கேள்வி எழுப்பிய ஞானசார தேரர்

0

காணாவில் 2 மில்லியன் டொலர் முதலிட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு எங்கிருந்து பணம் வந்தது. கிழக்கில் தங்க மலையேதும் உருவாகியுள்ளதா என்று ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், 

“இஸ்லாத்தில் ஹாக்கிமியத் மற்றும் கிலாபத் என்ற மதவாதங்களை நிலைநாட்டுவதற்காகவும் அவர்களின் நோக்கங்களை செய்து கொள்வதற்காக இலங்கைக்கு மிகப் பாரிய தொகை பணங்கள் வந்துள்ளன. முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை பிரிப்பதற்கு அவர்களின் ஊடக செயற்பாடுகளை நாமறிவோம்.

தனிப்பட்ட குரோதங்கள் 

அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை பாரியது. ஹிஸ்புல்லாவுடன் எங்களுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இல்லை. ஈஸ்டர் தாக்குதலுக்கான சஹ்ரான் எல்லாம் உருவாகியது கிழக்கில் தான்.

ஏறாவூர் பகுதியில் சரியா நீதிக்கு விருப்பமானவர்கள் மற்றும் அதை நடைமுறைப்படுத்துமாறு சில பள்ளிவாசல்களில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு கையொப்பம் பெறப்படுகின்றன.

அதனால் அவர்களுக்கென்று தனியான பல்கலைக்கழகம் வழங்க முடியாது. அதை அரசு சுவீகரிக்க வேண்டும்.

ஜமாஅதே இஸ்லாம் என்பது பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட இஸ்லாம் இராச்சியத்தின் கொள்கையாகும். அந்த கொள்கை தான் இலங்கையில் பலமான இஸ்லாம் கொள்கையாகும் என்றார்.

NO COMMENTS

Exit mobile version