Home சினிமா ஜனனியிடம் கெஞ்சி நின்ற குணசேகரன், ஆனால் அவர் வைத்த செக்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

ஜனனியிடம் கெஞ்சி நின்ற குணசேகரன், ஆனால் அவர் வைத்த செக்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

0

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் டிவியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.

தான் நினைத்த அனைத்து விஷயமும் நடந்தாக வேண்டும், நான் தான் இங்கு கிங் என்ற எண்ணத்தில் இருக்கும் குணசேகரன் வீட்டுப் பெண்களை படாத பாடு படுத்திவிட்டார். இப்போது பெண்கள் அனைவரும் தைரியமாக குணசேகரனை எதிர்த்து போராடவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

சமீபத்தில் குணசேகரன் தர்ஷனுக்கு அன்புக்கரசியுடன் திருமணம் செய்து வைக்க பிளான் போட ஈஸ்வரி தர்ஷனுக்கு பார்கவியுடன் திருமணம் நடத்த விரும்பினார்.
கடைசியில் குணசேகரன் பிளான் தோற்றுப்போக ஈஸ்வரி நினைத்ததை நிறைவேற்றி இருக்கிறார்கள் ஜனனி மற்றும் குழுவினர்.

புரொமோ

இன்றைய எபிசோட் புரொமோவில் வெற்றிகரமாக ஜனனி என அனைவரும் வீட்டிற்குள் வந்துவிட்டனர்.

வீட்டிற்கு வந்த ஜனனியிடம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்தையும் கொடுத்துவிடு என்கிறார். அதற்கு ஜனனி எதையும் எதிர்த்து நின்று தான் போராடுவோம், ஆனால் ஒரு வாரம் வேண்டும் என்கிறார்.

கரிகாலன் ஒரே அடியாக எல்லாரையும் போட்டு பேக் பண்ணிடலாமா என கேட்க தேவைப்பட்டால் அதையும் செய்வேன் என்கிறார் குணசேகரன். இதோ புரொமோ,

NO COMMENTS

Exit mobile version