Home இலங்கை அரசியல் ஒருவருடத்தின் பின்னர் அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றம்: அடுத்த 4 வருடங்களில் நடக்கபோவது என்ன..!

ஒருவருடத்தின் பின்னர் அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றம்: அடுத்த 4 வருடங்களில் நடக்கபோவது என்ன..!

0

 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாற்றத்தில் 25 அமைச்சர்கள் என அறிவிக்கப்பட்டது, அதிலும் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றால் அது பெயரளவு மாற்றம் என்று சிரேஸ்ட ஊடகவியலாளர் கஜமுகன் ஐயாதுரை தெரிவித்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இதுவரை காலமான இலங்கை அரசியலில் 50ற்கும் மேற்பட்ட அமைச்சு நிலைகளோடுதான் அரசாங்கம் பணியாற்றியுள்ளது.

எனவே இவ்வாறானதொரு நிலையை மாற்றும் பொழுது பல யதார்த்த சிக்கல்கள் ஏற்படும்.இந்த யதார்த்த சிக்கலை புரிந்துக்கொள்வதற்கு காலம் வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் தான் தேசியமக்கள் சக்தி அரசாங்கம் வெற்றிப்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான வாய்ப்பை கொடுக்குமாறும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பான முழுமையான விடயங்களை தாங்கி வருகின்றது கீழுள்ள காணொளி… 

NO COMMENTS

Exit mobile version