Home இலங்கை அரசியல் ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

எதிர்கால தேர்தல் சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை தமது குழு முன்வைக்கும் என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணிக்குழு அறிவித்துள்ளது.

குழுவின் பிரதான பார்வையாளரான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாச்சோ சான்செஸ் அமோர், ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

சுதந்திரமான மற்றும் வெளிப்படையான முறை

தமது கண்காணிப்பாளர்கள்,எந்த தூதரகங்களிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தோ உத்தரவுகளை பெறாமல், உண்மையான சுதந்திரமான மற்றும் வெளிப்படையான முறையில் செயல்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கை கையொப்பமிட்டுள்ள தேசிய சட்டம் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச தரங்களுக்கு இணங்க தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை தமது கண்காணிப்பாளர்கள் மதிப்பீடு செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, தேர்தல் நிர்வாகத்தின் பணி, சட்ட கட்டமைப்பு மற்றும் பிரசாரத்தின் நடத்தை, ஊடகங்களின் பணி மற்றும் தேர்தல் செயல்பாட்டில் சமூக ஊடக வலைப்பின்னல்களின் பங்கு போன்ற தேர்தல் செயல்முறையின் பல்வேறு அம்சங்களை தமது குழு அவதானித்து பகுப்பாய்வு செய்யும் என தெரிவித்துள்ளார்.  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

Source: https://tamilwin.com/article/european-election-observation-commission-sri-lanka-1725200885

NO COMMENTS

Exit mobile version