Home ஏனையவை ஆன்மீகம் வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் நாளை

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் நாளை

0

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்புர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்
நாளை இடம் பெறவுள்ளது.

குரோதி வருட கொடியேற்ற பெருந்திருவிழா ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன்
குருக்கள் தலைமையில் மற்றும் சிவாச்சாரியார் இணைந்து கிரியைகளை நாளை(02) காலை 9:15 மணியளவில் நடாத்தவுள்ளனர்.

ஆழ்வார் திருவிழா

நாளை ஆரம்பமாகும் கொடியேற்ற திருவிழாவில் ஆறாம் திருவிழா வரை காலை மற்றும் மாலை
சிறப்பு அபிஷேக பூசைகள் இடம்பெற்று 7 ஆம் திருவிழாவான 08ஆம் திகதியன்று
வல்லிபுரத்து ஆழ்வார் வெளிவீதி வரவுள்ளார்.

இதனைதொடர்ந்து, 8 ஆம் திருவிழாவான குருக்கட்டு பிள்ளையார்
திருவிழா 09ஆம் திகதி அன்றும், 9 ஆம் திருவிழாவான வெண்ணைத் திருவிழா 10ஆம் திகதியன்றும், 10
ஆம் திருவிழாவான துகில் திருவிழா 11ஆம் திகதியன்றும், 11 ஆம் திருவிழாவான பாம்புத்திருவிழா
12ஆம் திகதியன்றும், 12ஆம் திருவிழாவான கம்சவத திருவிழா 13ஆம் திகதியன்றும், 13 ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா 14ஆம் திகதியன்றும், 14 ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா 15ஆம் திகதியன்றும், 15 ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா 16ஆம் திகதியன்றும்,
16ஆம் திருவிழாவான சமுத்திர திருவிழா 17ஆம் திகதியன்றும் இடம்பெறவுள்ளதுடன்,
மறுநாள் 18 ஆம் திகதி 17 ஆம் திருவிழாவாக கேணித்தீர்த்தமும் நடைபெறவுள்ளது.

திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளவர்கள் சைவ சமய முறைப்படி திருவிழாவில்
கலந்துகொள்ளுமாறும் ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேசசபையும், பாதுகாப்பு ஏற்பாடுகளை
பருத்தித்துறை பொலிஸாரும், மேற்கொண்டுள்ளதுடன், போக்குவரத்து ஏனைய வசதிகளும்
சம்மந்தப்பட்ட தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version