Home இலங்கை கல்வி தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

0

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது, பரீட்சை திணைக்களத்தினால் இன்று (04) விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கசிந்த மூன்று கேள்விகளுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு

பரீட்சைக்கு முன்னதாக மூன்று கேள்விகள் கசிந்ததாக எழுந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. அமித் ஜயசுந்தரவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இது தொடர்பான நீதிமன்ற உத்தரவு கடந்த 31 ஆம் திகதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version