Home இலங்கை அரசியல் சீன தூதரை சந்தித்த இந்தியாவுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர்

சீன தூதரை சந்தித்த இந்தியாவுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர்

0

இந்தியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகரும் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின்
நிறுவனருமான மிலிந்த மொரகொட, இலங்கைக்கான சீனத் தூதர் கி சென்ஹோங்கைச்
சந்தித்து, சீன – இலங்கை உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து
விவாதித்துள்ளார்.

தூதர் கி யின் இல்லத்தில் நடைபெற்ற மதிய உணவு விருந்தின்போது, இரு தரப்பினரும்
இந்த விவாதிப்பை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய கலந்துரையாடல் 

உலகளாவிய நிலைமை, சீன-இலங்கை உறவுகள், சீன முதலீட்டாளர்களுக்கான இலங்கையில்
முதலீட்டுச் சூழல் மற்றும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இதன்போது
ஆராயப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் சீன-இலங்கை ஒத்துழைப்பு ஆய்வு
மையத்தால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மொரகொட, தூதர் கி யிடம்
விளக்கினார். 

அத்துடன்,தெற்காசியாவுடன் பொதுவாகவும், குறிப்பாக இலங்கையுடனும் தொடர்பு கொள்ள
ஆர்வமுள்ள சீன நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற, தமது அறக்கட்டளையின்
விருப்பத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version