Home இலங்கை அரசியல் மட்டக்களப்பில் நிராகரிக்கபட்ட வியாழேந்திரனின் வேட்புமனு!

மட்டக்களப்பில் நிராகரிக்கபட்ட வியாழேந்திரனின் வேட்புமனு!

0

முன்னாள் இராஜாங்க அமைச்சர்
எஸ்.வியாழேந்திரனை (S. Viyalendiran) தலைமை வேட்பாளராக கொண்டு வேட்புமனுவை தாக்கல் செய்த ஜனநாயக
தேசிய கூட்டணி உள்ளிட்ட 06 சுயேட்சைக்குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே மாவட்ட
அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 வேட்பு மனு தாக்கல்

33 சுயேட்சைக் குழுக்களும், 23 கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்காக
மட்டக்களப்பில்
வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையினால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று (11.10.2024) நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version