Home இலங்கை இஸ்ரேல் தாக்குதல் : லெபனானில் சிறிலங்கா படையினர் காயம்

இஸ்ரேல் தாக்குதல் : லெபனானில் சிறிலங்கா படையினர் காயம்

0

லெபனானில்(lebanon) உள்ள ஐ.நா தளத்தின் மீது இஸ்ரேல்(israel) இராணுவம் நேற்று (10.10.2024) தாக்குதல் நடத்தியுள்ளது.ஐநாவின்(un) ப்ளூ ஹெல்மெட் என்ற தளத்தின் மீதே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலில் லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையில் கடமையாற்றிய, 2 சிறிலங்கா படையினர், காயமடைந்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கண்காணிப்பு கோபுரங்கள் மீது விழுந்த எறிகணை

Naqoura வில் உள்ள UNIFIL இன் கண்காணிப்பு கோபுரங்கள் மீது விழுந்த எறிகணை ஒன்றின் துண்டுகளால் வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், இந்த தாக்குதலை “சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்” என்று தெரிவித்துள்ளார்.

 வன்மையான கண்டனம்

 அத்துடன் அமெரிக்கா,இத்தாலி மற்றும் பிரிட்டன் உட்பட்ட நாடுகள் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளன.

செப்டம்பர் 23 முதல் ஹிஸ்புல்லா இலக்குகள் என்று கூறும் இடங்கள் மீது இஸ்ரேல் லெபனான் முழுவதும் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 1,351 பேர் கொல்லப்பட்டதுடன், 3,800 க்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்தியது மற்றும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version