Home இலங்கை அரசியல் மட்டக்களப்பு மாவட்டத்தில் 392 வேட்பாளர்கள் களத்தில்…..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 392 வேட்பாளர்கள் களத்தில்…..!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் 392 வேட்பாளர்கள் வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மாவட்ட
அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணா அம்மான்,
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரது
கட்சிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தமது வேட்பு மனுக்களை தாக்கல்
செய்துள்ளன.

 

 

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல்

எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு
மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் கடந்த (4) திகதி முதல் மட்டக்களப்பு
ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் இடம்பெற்று
வந்த நிலையில், இறுதி தினமான இன்று வரை 33 சுயேட்சை குழுக்களும், 23 அரசியல்
கட்சிகளும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இதன் அடிப்படையில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா
அம்மான்) தேசிய ஜனநாயக முன்னணி கட்சியில் நாடாளுமன்ற தேர்தலில்
போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளதுடன், முன்னாள் இராஜாங்க
அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
கட்சியிலும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் கட்சியின் உப தலைவர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் நாடாளுமன்றத் தேர்தலில்
போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

 மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை தலைமை வேட்பாளராக கொண்டு வேட்புமனுவை தாக்கல் செய்த ஜனநாயக தேசிய கூட்டணி உள்ளிட்ட 06 சுயேட்சை குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

 

392 வேட்பாளர்கள் போட்டி

அத்தோடு மேலும் பல
அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் தமது வேட்பு மனுக்களை தாக்கல்
செய்துள்ளன.

கடந்த (04) திகதி முதல் இறுதி தினமான இன்று வரை 33 சுயேட்சை குழுக்களும்,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தேசிய ஜனநாயக முன்னணி, தேசிய மக்கள்
சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய
கூட்டணி, மக்கள் போராட்டம் முன்னணி, ஜனசத்த பெரமுனை, அகில இலங்கை தமிழ்
காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி
உள்ளிட்ட 23 கட்சிகள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை
தெரிவு செய்வதற்காக இம்முறை 392 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதில் 22 கட்சிகளினதும் 27 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் தேர்தல்
திணைக்களத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இம்முறை மட்டக்களப்பு
மாவட்டத்தில் 449,686 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், கல்குடா
தொகுதியில் 134,104 வாக்காளர்களும்,
மட்டக்களப்பு தொகுதியில் 210,293 வாக்காளர்களும்
பட்டிருப்பு தொகுதியில் 105,289 வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.

இதேவேளை, 81 வலயங்களாக பிரிக்கப்பட்டு 442 வாக்களிப்பு நிலையங்களில் இம்முறை
வாக்களிப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

NO COMMENTS

Exit mobile version