முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa) எதிரான வழக்கொன்றின் ஆவணங்களைப் பரிசோதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது நேற்றைய (16) தினம் கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.