Home இலங்கை சமூகம் கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இரண்டாவது நாளாக முன்னெடுப்பு

கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இரண்டாவது நாளாக முன்னெடுப்பு

0

 முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட
அகழ்வாய்வின், இரண்டாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் இன்று (05)
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் கொக்கிளாய் முல்லைத்தீவு பிரதான வீதியின் குறிப்பிட்ட ஒரு பகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் மனித
எச்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பச்சை நிற ஆடைகள்

இந்த பகுதிக்கு மேலாக புதிதாக தகர
கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய அகழ்வு நடவடிக்கையின் போது பச்சை நிற ஆடைகள் வெளித் தெரிந்திருந்தது.

நாளை காலை மூன்றாம் நாள் அகழ்வு பணி நடைபெறவுள்ளதோடு மிகுதி உடற்பாகங்கள் முழுமையாக எடுக்கப்படும் என
நம்பப்படுகிறது. 

கொக்குதொடுவாய் மனித புதைகுழி இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்
பண பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் நேற்றைய தினம் 04.07.2024
மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் ஆரம்பமாகி இன்றையதினம் இரண்டாம் நாள் இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது. 

இவ் அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்,தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தொல்லியல் திணைக்களத்தினர், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த மற்றும் பணிப்பாளர் ஜெ.தற்பரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மனித உரிமைகள் சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், மற்றும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version