Home இலங்கை சமூகம் முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி

0

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணி மூன்றாவது
நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு கழக மைதானத்தில்
விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு
பணி இடம்பெற்று வருகிறது.

பொலிஸ் குழுவினர் 

கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில்
இருந்து வருகை தந்த பொலிஸ் குழுவினரால் நேற்று முன்தினம் (08) மாலை
முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்பின்னர், நேற்றையதினம் வரை எதுவும் கிடைக்கப்பெறாத
நிலையில் இடைநிறுத்தப்பட்டு இன்றையதினம் காலை மீளவும் தண்ணீர் அகற்றும் பணி
இடம்பெற்று மூன்றாம் நாள் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

முள்ளிவாய்க்கால் கிழக்கு, மேற்கு பகுதிகளில் அண்ணளவாக 11இற்கு மேற்பட்ட
இடங்களில் இதுவரை அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையிலும் எதுவும் கிடைக்காமல்
இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/excavation-on-ltte-weapons-in-mullivaikkal-1728560396

NO COMMENTS

Exit mobile version