Home இலங்கை அரசியல் வட மாகாண காணி விவகாரத்தில் அரசு பின்வாங்கல்! கஜேந்திரகுமார் வெளியிட்டுள்ள காரணம்

வட மாகாண காணி விவகாரத்தில் அரசு பின்வாங்கல்! கஜேந்திரகுமார் வெளியிட்டுள்ள காரணம்

0

அநுர அரசாங்கத்தின் உண்மையான எண்ணம் அம்பலம்படுத்தப்பட்டமையே காணி தொடர்பான முடிவுகளில் அவர்களின் பின்வாங்கலுக்கான காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஐ.பி.சி ஊடகத்திற்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனை கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”அரசாங்கம் குறித்த வர்த்தமானியை வெளிவதற்கு கூறிய காரணமானது, வடக்கில் 70 சதவீதமான மக்களின் காணிகளில் பிரச்சினை இருப்பதாக கூறியது.

அதாவது வடக்கில் காலம் காலமாக காணப்படும் காணி சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஓர் முயற்சியாகவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதாகவும் அரசாங்கம் கூறியது.

வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளன. ஆனால் வர்த்தமானியில் நான்கு மாவட்டங்கள் பற்றி மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டம் அதில் உள்ளடக்கப்படவில்லை.” என கூறினார்.

வட மாகாணத்தில் காணித் தீர்வு தொடர்பாக, 2025, மார்ச் 28 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

முன்னதாக, வட மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள காணி உரிமை தீர்வுத் திணைக்களைத்தால், வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசாங்கத்தின் நோக்கம் என்ன? அவர்களின் கருத்து எவ்வாறு வர்த்தமானியில் பிழைக்கின்றது? இதில் எவ்வாறான ஆபத்துக்கள் உள்ளன? என்பது குறித்து தெரிவித்த கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்…,

NO COMMENTS

Exit mobile version