Home இலங்கை அரசியல் எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டுகளுக்கு அநுர தரப்பு பதிலடி

எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டுகளுக்கு அநுர தரப்பு பதிலடி

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினதும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினதும் செலவுத் தொகை ஒரே மாதிரியானவை என எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆளும் தரப்பு பதில் வழங்கியுள்ளது.

உலக உணவுத் திட்டத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்ட 1300 மில்லியன் டொலர்கள் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படுவதால் ஜனாதிபதியின் தொகை ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவு திட்டதின் தொகைக்கு சமமாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர (Lakmali Hemachandra) இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெளிவு படுத்தியுள்ளார்.

குறைக்கப்பட்ட செலவு

இதேவேளை, ஜனாதிபதியின் தனிப்பட்ட ஊழியர்களுக்கான செலவு அறுபத்து நான்கு வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஜனாதிபதியின் செலவிற்காக வரவு செலவுத் திட்டத்தில் ரணில் ஒதுக்கிய அதே தொகையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒதுக்கியுள்ளதாக கேகாலை மாவட்ட சபை உறுப்பினர் கபீர் ஹாசிம் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version