Home இலங்கை அரசியல் தங்கையை நினைவேந்திய அண்ணனுக்கு நேர்ந்த கதி! சபையில் பகிரங்க எச்சரிக்கை

தங்கையை நினைவேந்திய அண்ணனுக்கு நேர்ந்த கதி! சபையில் பகிரங்க எச்சரிக்கை

0

தங்கையை நினைவேந்திய அண்ணனுக்கு நேர்ந்த கதி
சபையில் பகிரங்க எச்சரிக்கை

யுத்தத்தில் உயிர்நீத்த தனது தங்கையை நினைவேந்திய அண்ணன் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்காக நான்காம் மாடிக்கு அழைத்துள்ளனர் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன்(Srinesan) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அறிவிப்பு

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மேலும், உயிர்நீத்த தமது உறவுகளை நினைவேந்த எவ்வித தடையும் இல்லை என்று அண்மையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தனது தங்கையை நினைவேந்தியமைக்காக கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த நாராயணன் என்ற நபர் இவ்வாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கம் நல்ல விடயங்களை செய்தாலும் கூட ஒரு சில அதிகாரிகள் இந்த அரசாங்கத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றார்களோ என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version