பாகிஸ்தானின் கிழக்கு பகுதியான லாகூரைச் சேர்ந்த பைசலாபாத் நகரில் அமைந்துள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்த வெடிப்பு சம்பவம் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பில் தொழிற்சாலை கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் அருகிலுள்ள வீடுகளும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
முகாமையாளர் கைது
வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற போது தொழிற்சாலை முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொழிற்சாலை உரிமையாளர் சம்பவ இடத்திலிருந்து தப்பிசென்றுள்ளார்.
இந்நிலையில் தொழிற்சாலை உரிமையாளரை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம் இதுவரையில் தெளிவாக தெரியவரவில்லை. எனினும், பின்னர் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
