போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
போலி வைத்தியர்கள்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கு உட்பட நாட்டின் 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் சிலர்
கடமையாற்றுகின்றார்கள். அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச்
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவத்துறை மகத்தானது. போலி வேடம் தரித்து எவரும் மருத்துவத்துறைக்குள்
உள்நுழைய முடியாது. மக்களின் உயிருடன் விளையாட எவருக்கும் இடமளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.