Home இலங்கை அரசியல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்

0

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து 6,000 முறைப்பாடுகளை அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளதாக வெளிவிவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

தற்போதும் நாளாந்தம் ஏராளமான முறைப்பாடுகள் கிடைகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

முறைப்பாடுகள்

இதேவேளை முறைப்பாடுகளின் அடிப்படையில், அந்நிறுவனங்களின், உரிமங்களை இடைநிறுத்தல் மற்றும் சட்ட ரீதியாக வழக்குத் தொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும், பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கும் வெவ்வேறு சட்ட கட்டமைப்புகள் பொருந்தக்கூடியவையாக உள்ளன.

கடந்த காலங்களில், இரண்டு பிரிவுகளையும் சேர்ந்த நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று கூறியுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version