Home இலங்கை அரசியல் அநுர அரசை விரட்டியடிக்க மக்கள் தயார்! மகிந்தவின் நம்பிக்கை

அநுர அரசை விரட்டியடிக்க மக்கள் தயார்! மகிந்தவின் நம்பிக்கை

0

போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த கும்பலை விரட்டியடிக்க மக்கள்
தயாராகி வருகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். 

இனிவரும் தேர்தல்கள் எமக்கு வெற்றி வாய்ப்புக்களையே பெற்றுத் தரும். நாம்
மீண்டெழுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாம் மீண்டெழுவோம்

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வீழ்ந்துவிட்டது, இனி அந்தக் கட்சிக்கு மீள்
எழுச்சி இல்லை என்று எவரும் தப்புக்கணக்குப் போடக்கூடாது.

இறுதியாக நடைபெற்ற இரண்டு தேர்தல்களும் எமக்குத் தோல்விகளைத் தந்தாலும் நாம்
அதனைப் படிக்கற்களாக மாற்றியுள்ளோம்.

இனிவரும் தேர்தல்கள் எமக்குச் சாதகமாகவே அமையும்.

அதாவது அந்தத் தேர்தல்கள்
எமக்கு வெற்றி வாய்ப்புக்களையே பெற்றுத் தரும். நாம் மீண்டெழுவோம்.

தேர்தலின்போது போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த கும்பலை
விரட்டியடிக்க மக்கள் தயாராகி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version