Home இலங்கை அரசியல் போலியான கணக்கெடுப்பு : பொலிஸாரிடம் முறைப்பாடளித்த ஜனாதிபதி வேட்பாளர் – செய்திகளின் தொகுப்பு

போலியான கணக்கெடுப்பு : பொலிஸாரிடம் முறைப்பாடளித்த ஜனாதிபதி வேட்பாளர் – செய்திகளின் தொகுப்பு

0

எம்பிலிப்பிட்டியவில் பொது இடத்தில் போலியான வாக்களிப்பு நிலையத்தை நடத்தி
அதன் பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டமை தொடர்பில்
உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க
எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறி தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் குழுவினால்
இந்த போலி வாக்களிப்பு நிலையம் நடத்தப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க
தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இருந்து சில
வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு,
போலி வாக்குச் சீட்டு தயாரித்து இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக அவர்
குறிப்பிட்டுள்ளார். 

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..

NO COMMENTS

Exit mobile version