Home இலங்கை குற்றம் முல்லைத்தீவு – கொக்கிளாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை

முல்லைத்தீவு – கொக்கிளாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை

0

முல்லைத்தீவு (Mullaitivu)  கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை
செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (15) இரவு இடம்பெற்றுள்ளது.

வாய்த்தகராறு பின்னர் கைகலப்பு

கண்டி, நுவரெலியா பகுதியில் இருந்து தொழில் நிமித்தம் வந்த இருவர்
முல்லைத்தீவு கொக்குளாய் கர்நாட்டு கேணிப்பகுதில் வாடியில்
தங்கியிருந்துள்ளனர்.

குறித்த இருவரும் போதைக்கு அடிமையாகி இருந்த நிலையில்
நேற்று மாலை வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில்
நேற்றையதினம் இரவு நுவரெலியா பிரதேசத்தில் வசிக்கும்
குடும்பஸ்தர் கண்டியில் வசிக்கும் மற்றைய நபரை அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் குறித்த விடயம் தொடர்பாக கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல்
வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மரணமடைந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலதிக விசாரணை

குறித்த சம்பவத்தில்
சுந்தரராஜ் எனும் 38 வயதுடைய
கண்டியினை சேர்ந்த நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன்
தொடர்புடைய நுவரெலியா மஸ்கெலிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய மற்றைய நபர்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு
வருகிறனர்.

NO COMMENTS

Exit mobile version