Home இலங்கை சமூகம் புதுக்குடியிருப்பில் வீடொன்றினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

புதுக்குடியிருப்பில் வீடொன்றினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

0

முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் வீடொன்றினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கபட்டவர் விசுவமடு 10ஆம் கட்டையை சேர்ந்த 52 வயதுடைய கிருஸ்ணன் கிருஸ்ணராசா என இனங்கானப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள்

குறித்த நபர் குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி- அ.ராயூகரன்

Source: https://tamilwin.com/article/family-member-found-dead-body-puthukkudiyiruppu-1713787698

NO COMMENTS

Exit mobile version