Home சினிமா ராஷ்மிகாவிடம் அத்துமீறிய ரசிகர்.. வைரலாகும் வீடியோ!!

ராஷ்மிகாவிடம் அத்துமீறிய ரசிகர்.. வைரலாகும் வீடியோ!!

0

ராஷ்மிகா மந்தனா

தென்னிந்திய படங்களில் தாண்டி பாலிவுட் சினிமாவிலும் கலக்கி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கடந்த 2018 ம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடித்த கீதகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

ராஷ்மிகா, தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். இப்படம் சிறப்பான வசூலை பெற்றது.

வீடியோ

இந்நிலையில் மும்பை விமான நிலையத்திற்கு வந்த ராஷ்மிகாவை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் அவருடன் இணைந்து செல்பி எடுக்க முற்பட்டனர்.

அப்போது உணர்ச்சிவசப்பட்ட ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவின் கையை பிடித்து செல்பி கேட்டார். அப்போது அவர் ஒரு நிமிடம் அசௌகரியமாக உணர்ந்தார். இருப்பினும் கோபத்தை வெளிப்படுத்தாமல் புன்னகையுடன் கடந்து சென்றார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

Source: https://cineulagam.com/article/fans-misbehaved-with-rashmika-mandanna-1720856894

NO COMMENTS

Exit mobile version