Home உலகம் உலகின் அதிவேக தொடருந்தை கண்டுபிடித்து வரலாற்று சாதனை படைத்த சீனா

உலகின் அதிவேக தொடருந்தை கண்டுபிடித்து வரலாற்று சாதனை படைத்த சீனா

0

மணிக்கு 450 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் உலகின் அதிவேக தொடருந்தை அறிமுகம் செய்து சீனா வரலாற்று சாதனையை படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட ‘சிஆா்450’ எனும் இந்த புல்லட் தொடருந்து நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயண நேரம் வெகுவாக குறையும் என சீனா தெரிவித்துள்ளதுடன் இதுகுறித்து சீன தொடருந்து நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 450 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்து சிஆா்450 புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

பல்வேறு கட்ட சோதனைகள்

வேகம், எரிசக்தி பயன்பாடு, உள் இரைச்சல் குறைப்பு, பிரேக் செயல்பாடு உள்ளிட்டவற்றில் உலக அளவில் புதிய தரநிலைகளை இந்த தொடருந்து நிா்ணயித்துள்ளது.

தற்போது செயல்பாட்டில் உள்ள மணிக்கு 350 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் அதிவேக ‘சிஆா்400’ புல்லட் தொடருந்தை விட இதன் வேகம் அதிகமாக உள்ளது.

சிஆா்450 தொடருந்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 47,000 கிலோ மீற்றர் தொலைவுக்கு அதிவேக தொடருந்து தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெய்ஜிங்-ஷாங்காய் வழித்தடம் வழியே இயக்கப்படும் தொடருந்துகள் மிகவும் லாபகரமானதாக உள்ளன.

பிற வழித்தடங்களில் பெரிய அளவில் லாபம் இல்லை என்றபோதும் அதிவேக தொடருந்து சேவைகள் மூலம் நாட்டின் தொழில் வளா்ச்சி மேம்பட்டுள்ளது.

மேலும், கடந்த சில ஆண்டுகளில் தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் அதிவேக தொடருந்துகளை சீனா ஏற்றுமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version