விடுதலை 2
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் உருவான விடுதலை 2 திரைப்படம் கடந்த 20ஆம் தேதி வெளிவந்தது.
இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ரிலீஸுக்கு இன்னும் 10 நாட்கள் தான்.. ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் விடாமுயற்சி
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. உலகளவில் 10 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது.
வெற்றி கொண்டாட்டம்
இந்த நிலையில், விடுதலை 2 படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் போது, தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமார், இயக்குனர் வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..