Home இலங்கை அரசியல் யுக்திய 2.0! திடீர் குதிப்பு ஏன்? பாதாள உலகு ஆட்சிக்கு சதி செய்வதாக அச்சம்!

யுக்திய 2.0! திடீர் குதிப்பு ஏன்? பாதாள உலகு ஆட்சிக்கு சதி செய்வதாக அச்சம்!

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இலங்கை மீதான வரிவிதிப்பு எவ்வாறு வரும் என்ற குழப்பத்தில் உள்ள சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளுரில் போதைப்பொருள் கடத்தல் உட்பட்ட பாதாள உலகின் ஒக்டோபஸ் கரங்கள் வீரியமடைவது கலக்கத்தைக் கொடுத்துள்ளது.

இதனால் கடந்த வருடம் ரணில் ஆட்சியில் பாதாள உலகை ஒடுக்க எடுக்கப்பட்ட யுக்திய நடவடிகையை கேலி செய்து ஆட்சிக்கு வந்ததும் அந்த நடவடிக்கையை நிறுத்திய திசைகாட்டி அரசாங்கம் இப்போது குறியீட்டு பெயர் எதனையும் குறிப்பிடாமல் நாடளாவிய ரீதியில் யுக்திய 2.0 வை முடுக்கியுள்ளது.

கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை நாட்டில் 60 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து அதில் 40 பேர் கொல்லப்பட்டு 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வேறுவழியின்றி இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இதற்கிடையே இப்போது பிள்ளையானின் சகா இனியபாரதியும் உள்ளே தூக்கிப்போடப்பட்ட நிலையில், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவருவதற்கு அரசாங்கமும் ஒரு விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தபட வேண்டும் என்ற ஆச்சரிய நுட்பத்தை அரசதலைவர் குறிப்பிடும் நிலையில் இந்த விடயங்களை தொட்டுவருகிறது செய்திவீச்சு…

https://www.youtube.com/embed/Gyw-9ZBvP1I

NO COMMENTS

Exit mobile version