Home இலங்கை அரசியல் தமிழ் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

தமிழ் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

0

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள,பா.அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டுள்ளது.

 சி.வி.விக்கினேஸ்வரன், தலைமையிலான, தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரான, த.சிற்பரனால், பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடவுள்ளார் என கடந்த 8ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பிலான அறிவிப்பு ந.ஶ்ரீகாந்தாவால் வெளியிடப்பட்டது.

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று அண்மையில் தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் கைச்சாத்திடப்பட்டது.

சிவில் சமூக கட்டமைப்பினருடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய பசுமை இயக்கம்,தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவளிக்கவுள்ளன.

you may like this


NO COMMENTS

Exit mobile version