யாழ்ப்பாணத்தில் (Jaffna) தேசிய மக்கள் சக்தியின் முழு நேர பெண் செயற்பாட்டாளர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த துயர சம்பவம் புதன்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய செ.ஜான்சிகா என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தலில் போட்டி
இவர் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாகவும் மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பாக போட்டியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
You may like this
https://www.youtube.com/embed/8tTna-TKN70
