Home இலங்கை அரசியல் திடீரென ரஷ்யா பறந்த ரணில்

திடீரென ரஷ்யா பறந்த ரணில்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை (12) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளார்

இந்த பயணத்தில் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லவுள்ளதாகவும் 22 ஆம் திகதி நாட்டுக்குத் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ஜேர்மனிக்கு விஜயம்

இதேவேளை, ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (11) பிற்பகல் பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) சந்தித்து கலந்துரையாடினார்.

அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) சுகீஷ்வர குணரத்ன மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.youtube.com/embed/8tTna-TKN70

NO COMMENTS

Exit mobile version