அடுத்த பெருபோகத்தில் இருந்து யூரியா உர மூட்டை 4000 ரூபாவிற்கு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு 42,000 ரூபாவாக இருந்த யூரியா உர மூட்டையின் விலை தற்போது 8000 ரூபாவாக குறைந்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு பெருபோகத்திற்கு தேவையான அளவு MOP உரத்தை ஒவ்வொரு வயலுக்கும் இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கடன் நிவாரணம்
அத்தோடு, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.