Courtesy: Sivaa Mayuri
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தமக்கு எதிராக கோரியுள்ள 500 பில்லியன் ரூபாய் நட்டஈடு என்ற தமக்கு எதிரான சட்ட அச்சுறுத்தலை ஜனாதிபதி வேட்பாளர் ஆனந்த சாகர தேரர் ஏற்றுள்ளார்.
இந்தநிலையில் தம்மை மிரட்டி தமது அறிக்கைகளை மீளப்பெறச் செய்யலாம் என மனுஷ நாணயக்கார நம்பினால், அது தவறானது. அவரை நீதிமன்றில் சந்திக்க தாம் தயாராக உள்ளதாக, ஜனாதிபதி வேட்பாளர் ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக விசாரணைகள்
மூன்று பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகள் கூட்டமைப்பைச் சேர்ந்த பஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஏற்கனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு எதிராக பல மோசடிகள் மற்றும் முறைகேடுகள் உட்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இம்மாதம் 3ஆம் திகதி மிகிந்தல ரஜ மகா விகாரைக்கு விஜயம் செய்த பெண் ஒருவர், தனது தனிப்பட்ட அனுபவத்தை தேரரிடம் பகிர்ந்துகொண்டதை அடுத்தே தேரர், அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அத்துடன் பலர் இதே போன்ற பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளதாக தேரர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் உடனடியாக விசாரணைகளை, முன்னெடுக்க வேண்டும் என்று அவர் எதிர்க்கட்சி தலைவரிடம் வலியுறுத்தியுள்ளார்.