Courtesy: Sivaa Mayuri
இலங்கை நிதி அமைச்சின் அதிகாரிகள் ஜூலை 17ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி விடுவிப்பு
இதன்போது, ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் பிரதி அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.
