குஜராத் (Gujarat) – முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு (Colombo) வந்த சரக்கு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோவாவிற்கு (Goa) தென்மேற்கே நேற்று (19) மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விபத்தில் பிலிப்பைன்ஸைச் (Philippines) சேர்ந்த ஒரு மாலுமி ஒருவர் உயிரிழந்ததாக, இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
தீயணைக்கும் பணி
சர்வதேச கடல்சார் அபாயகரமான சரக்குகளை ஏற்றி வந்த இந்த கப்பலின் முன் பகுதியில் தீப்பரவலினால் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குறித்த கப்பலில் பிலிப்பைன்ஸ், மொண்டினெக்றோ (Montenegro) மற்றும் உக்ரைன் (Ukraine) நாட்டவர்கள் உட்பட 21 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அங்கு நிலவும் சீரற்ற வானிலையையும் மீறி தீயை அணைக்கும் பணியை இந்திய கடற்படை மேற்கொண்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைவிட கோவாவில் இருந்து இரண்டு ICG கப்பல்கள் தீயை அணைக்கும் முயற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
#WATCH | A major fire broke out on a container cargo merchant vessel about 102 nautical miles southwest of Goa. ICG is doing the fire fighting operation on the ship which carries international maritime dangerous goods amid bad weather and heavy rains.
(Source: Indian coast… pic.twitter.com/viDy564oze
— ANI (@ANI) July 19, 2024