Home உலகம் லெபனானில் இஸ்ரேல் படைக்கு தொடரும் இழப்புகள்

லெபனானில் இஸ்ரேல் படைக்கு தொடரும் இழப்புகள்

0

தெற்கு லெபனான் (lebanon)கிராமத்தில் சனிக்கிழமை(26) மாலை ஹிஸ்புல்லா அமைப்பினருடன் நடந்த மோதலில் ஐந்து இஸ்ரேலிய ரிசர்வ் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 14 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.

காயமடைந்த 14 வீரர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல்(israel) படைத்துறை தெரிவித்துள்ளது.

தொடரும் ரொக்கட் தாக்குதல்

இதேவேளை ஈரான் ஆதரவு பயங்கரவாதக் குழு ஞாயிற்றுக்கிழமை வடக்கு இஸ்ரேல் மீது அதிகாலை மேற்கொண்ட ட்ரோன் மற்றும் ரொக்கெட் தாக்குதல்களில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்தனர் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா சுமார் 75 ரொக்கெட்டுகளை வீசியதாகவும், வடக்கு அரபு நகரமான தம்ராவில் மூன்று பேர் காயமடைந்தனர், இதில் ஒரு பெண் படுகாயமடைந்தார் எனவும் இஸ்ரேல் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

Source: https://ibctamil.com/article/five-idf-reservists-killed-14-wounded-lebanon-1730043676

NO COMMENTS

Exit mobile version