வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் தொங்கு பாலத்தில் இருந்த கேபிள் அறுந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மேலும் 24 பேர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் ஜின்ஜியாங்கில் உள்ள ஒரு அழகிய சுற்றுலா தலமான சியாட்டா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கேபிள் உடைந்த பின்னர் ஒரு பக்கமாக சாய்ந்த பாலம்
கேபிள் உடைந்த பிறகு பாலம் ஒரு பக்கமாக சாய்ந்தது, மேலும் சுற்றுலாப் பயணிகள் குழு அதில் தொங்குவதைfாணொளியில் படம் பிடித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் சுற்றுலாப் பகுதியை தற்காலிகமாக மூடிவிட்டனர்.
