Home இலங்கை அரசியல் அரசியல்வாதியின் மனைவி உட்பட 5 அரசியல்வாதிகள் விரைவில் கைது

அரசியல்வாதியின் மனைவி உட்பட 5 அரசியல்வாதிகள் விரைவில் கைது

0

பிரபல அரசியல்வாதி ஒருவரின் மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த கைதுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  

மிக் விமான ஒப்பந்த மோசடி   

வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணத்தை மோசடி செய்த அரசியல்வாதி, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர், சுற்றுலா சபையின் முறைகேடுகளில் ஈடுபட்ட தலைவர்கள் என பலர் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், மிக் விமான ஒப்பந்தத்தில் மோசடிகளில் ஈடுபட்ட பிரதிவாதிகள் குழு மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஒப்பந்தத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய வருடத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version