Home இலங்கை பொருளாதாரம் கொழும்பு பங்குச் சந்தையின் வரலாறு காணாத வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் வரலாறு காணாத வளர்ச்சி

0

கொழும்பு பங்குச் சந்தையின் (Colombo Stock Exchange) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 2024 ஆம் ஆண்டில் 49.66% வளர்ச்சியை எட்டியுள்ளது.

2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 10,654.16 அலகுகளாகப் பதிவாகியிருந்த அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண், அவ்வாண்டின் இறுதியில் 15,944.61 அலகுகளாக உயர்ந்துள்ளது.

பங்கு விலைக் குறியீடு மற்றும்

இதேவேளை, S&P SL20 சுட்டெண்ணின் படி, 2024 ஆம் ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தையின் வளர்ச்சி 58.46% ஆகும்.

அனைத்து பங்கு விலைக் குறியீடு மற்றும் S&P SL20 குறியீட்டின் இந்த பெறுமதிகள் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பெறுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.69 ட்ரில்லின்களாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version