Home இலங்கை சமூகம் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மியன்மார் சென்றுள்ள ஐந்து இலங்கை மாணவர்கள்

பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மியன்மார் சென்றுள்ள ஐந்து இலங்கை மாணவர்கள்

0

Courtesy: Sivaa Mayuri

மியான்மரில் (Myanmar) தொடர்ந்தும் இணைய குற்ற முகாம்களில் சிக்கியுள்ள 34 மாணவர்களை மீட்கும் முயற்சி நடந்து வரும் நிலையில் 5 இலங்கை மாணவர்கள் மியான்மருக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய கூறியுள்ளார்.

மியான்மர் முகாம்களில் சிக்கியிருந்த 20 மாணவர்கள் வெற்றிகரமாக நாடு திரும்பியதைத் தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் உரையாற்றினார்.

பொதுமக்களிடம் வலியுறுத்தல்

20 மாணவர்களை மீட்டமை குறிப்பிடத்தக்க சாதனையாக இருந்தாலும், எஞ்சிய 34 பேரை விடுவிப்பதில் தற்போது கவனம் திரும்பியுள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை தேடும் போது அவதானத்துடன் செயற்படுமாறும், மனித கடத்தலுக்கு பலியாகாமல் இருக்க சட்டபூர்வமான வழிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version