Home உலகம் டிட்வா புயல் எதிரொலி: சென்னையில் விமானங்கள் இரத்து

டிட்வா புயல் எதிரொலி: சென்னையில் விமானங்கள் இரத்து

0

டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறப்படும் ‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று (29) சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.

சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும் ஏ.டி.ஆர். எனப்படும் சிறிய ரக விமானங்கள் அனைத்தும் இன்று காலையில் இருந்து இரவு வரையில் இயக்கங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகள் அனைவரும் தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல், தங்கள் பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version