Home உலகம் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இலங்கையரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

பறந்து கொண்டிருந்த விமானத்தில் இலங்கையரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

0

அவுஸ்திரேலியா (Australia) சென்ற விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது நேற்று (9.1.2025) மெல்போர்ன் நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் 41 வயதான குறித்த சந்தேக நபர் தன்னை தகாத முறைக்கு உட்படுத்தியதாக பெண் பயணி ஒருவர் விமான ஊழியர்களிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.

ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை

இதையடுத்து டிசம்பர் 18 ஆம் திகதி மெல்பேர்ன் விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபரான இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தார்.  

இந்நிலையில் அவருக்கு எதிரான வழக்கு நேற்று மெல்போர்ன் நீதிவான் நீதிமன்றில் வந்த நிலையில் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். தற்சமயம் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கையர் பிணையில் உள்ளார்.

நீதிமன்றில் கடவுச்சீட்டு 

அவரது கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை முடியும் வரை விக்டோரியா அல்லது அவுஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளில் தங்கியிருப்பார்.

பிணை நிபந்தனைகளின் கீழ், அவர் வாரத்திற்கு மூன்று முறை காவல்நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version