Home உலகம் பற்றி எரியும் லொஸ் ஏஞ்சல்ஸ் : ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

பற்றி எரியும் லொஸ் ஏஞ்சல்ஸ் : ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

0

அமெரிக்காவின் (United States) லொஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயானது, காற்று காரணமாக மேலும் அதிகரிக்கக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் 

இதனிடையே, குறித்த பகுதியில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காட்டுத்தீ காரணமாக லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை விட்டு பெருமளவானவர்கள் வெளியேறியுள்ள நிலையில், அங்கு திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, காட்டுத்தீயின் போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிப்பதற்கும் அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version