Home இலங்கை அரசியல் சட்டவிரோதமாக காணிகளை கையகப்படுத்தியதாக முன்னாள் ஆளுநர் மீது குற்றச்சாட்டு

சட்டவிரோதமாக காணிகளை கையகப்படுத்தியதாக முன்னாள் ஆளுநர் மீது குற்றச்சாட்டு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சமூக விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமும், முன்னாள் ஆளுநருமான ரஜித் கீர்த்தி தென்னகோன், வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

முறைப்பாடுகள் 

2013 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட போகஹபெலஸ்ஸ வனப்பகுதியின் நில மோசடி தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வனப்பகுதி பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்குச் சொந்தமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  

சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அந்தப் பகுதியில் சட்டவிரோத மின்சாரத் திட்டம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முறையான ஆவணங்களை ஒப்படைக்காமல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி, அந்தப் பகுதியில் 5482 ஏக்கர் நிலத்தை ஒரு குழு பெற்றுள்ளதாகக் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“திட்ட அறிக்கையின்படி, கே.டி. ரஞ்சித் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு நபரால் இந்த நிலம் பெறப்பட்டுள்ளது.
இந்த நபரைக் கண்டுபிடிக்க நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். இதற்காக அவர் போலியான தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டையில் கூடுதல் இலக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அசல் எண் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சமூக விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமான ரஜித் கீர்த்தி தென்னகோனுக்குச் சொந்தமானது என்றும் அமைச்சர் வித்யாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

“இந்த கே.டி. ரஞ்சித் தான் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன். இந்த மோசடிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது என வித்தியாரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version