தென்கிழக்கு மொரோக்கோவில் (Morocco) பெய்த கனமழையின் தாக்கம் காரணமாக சஹாரா (Sahara Desert) பாலைவனம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை ஆகும். ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாளில் பெய்தது தான் இந்த வெள்ளபெருக்கிற்கு காரணம் என்று மொராக்கோ நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மொரோக்கோ தலைநகர் ரபாத்தில் (Rabat) இருந்து 450 கி.மீ தெற்கே அமைந்துள்ள டகோனைட் கிராமத்தில் பெய்த கனமழையால் இந்த வெள்ளம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வானிலை ஆய்வு
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம்100 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஜகோராவிற்கும் டாடாவிற்கும் இடையே பல ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்த ஆறுகள் நிரம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சஹாரா பாலைவனம் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்ற புகைப்படங்களை மொரோக்கோ வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
மேலும் சஹாரா பாலைவனம், வடக்கு, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் 9 மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பளவில் வெள்ளம் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.