Home இலங்கை அரசியல் பெருந்தோட்ட மக்களின் சம்பள உயர்வுக்கு சொந்தம் கொண்டாடும் அரசியல்வாதிகள்: முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்

பெருந்தோட்ட மக்களின் சம்பள உயர்வுக்கு சொந்தம் கொண்டாடும் அரசியல்வாதிகள்: முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்

0

பெருந்தோட்ட மக்களின் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா கிடைத்தமைக்கு அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாட முடியாது என மலையக ஜனநாயக முன்னணியின் தலைமைக்குழு உறுப்பினர்
சட்டத்தரணி எஸ். விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

மலையக ஜனநாயக முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேச்சை குழு இல.
11இல் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக ஊடக சந்திப்பு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர், “பெருந்தோட்ட மக்கள் அரசியல்வாதிகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு
வருகின்றார்கள். அண்மையில் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா கிடைத்தது
தமக்குக் கிடைத்த வெற்றி என்று பிரசாரம் செய்தார்கள்.

இவ்வாறு வழங்க முடியும்
என்று கம்பனிகள் சார்பில் ரொஷான் இராஜதுரை தான் கூறியிருந்தார். இதற்கு யாரும்
சொந்தம் கொண்டாட முடியாது. அத்தோடு சம்பள நிர்ணய சபையின் வர்த்தமானி
அறிவித்தலுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க 14 நாட்கள் அவகாசம்
தரப்பட்டிருந்தது.

அதற்குப் பிறகுதான் கருத்து கூற முடியும். ஆனால்,
கைச்சாத்திட்ட தினத்திலேயே சம்பளம் கிடைத்து விட்டதாக வெற்றி விழா
கொண்டாடினார்கள். இத்தகைய பொய், புரட்டுகளை அம்பலப்படுத்தி எமது மக்களுக்குத்
தெளிவூட்டுவதே எமது நோக்கமாகும்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் கூறுகையில், 

NO COMMENTS

Exit mobile version